ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சி.இ.ஒ.-க்கு வலுக்கும் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      வர்த்தகம்
icici logo

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சாந்தா கொச்சாரை பதவி விலகுமாறு இயக்குநர் குழுவில் ஒரு பிரிவினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

கடந்த வாரம்தான் சாந்தா கொச்சார் மீது முழு நம்பிக்கை உள்ளது என இயக்குநர் குழு சார்பில் வங்கித் தலைவர் எம்.கே. சர்மா அறிவித்திருந்தார். ஆனால் சிபிஐ விசாரணை நாளுக்குநாள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் இயக்குநர் குழுவில் ஒரு பிரிவினர் சாந்தா கொச்சார் பதவியில் தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இயக்குநர் குழு இரண்டுபட்டுள்ளது. ஒரு பிரிவினர் ஆதரவாகவும், மற்றொரு பிரிவினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து