முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. அனுமார் கோயிலுக்கு வெண்கல மணி காணிக்கை அளித்த முஸ்லீமுக்கு எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பா.ஜ.க சார்பில் உத்தர பிரதேச மேல்சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த புக்கல் நவாப் என்பவர் அனுமார் கோயிலுக்கு வெண்கல மணி காணிக்கையாக அளித்தார். ராமர் கோயில் கட்டவும் ஆதரவளித்த இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உ.பி.யில் பா.ஜ.க சார்பில் மேல்சபைக்கு போட்டியிட்ட 13 வேட்பாளர்களில் புக்கல் நவாப் (64) என்ற முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரும் ஒருவர். வேட்புமனு தாக்கல் செய்ய செல்வதற்கு முன்னதாக லக்னோவின் ஹஸ்ரத்கன்சிலுள்ள பிரபல அனுமார் கோயிலில் தரிசனம் செய்தார். கோயிலுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெண்கல மணியை நன்கொடையாக அளித்தார். இது உபி முஸ்லிம்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

புக்கலை இஸ்லாத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதாக உ.பி.யின் தியோபந்தில் உள்ள மதரஸாக்களில் ஒன்றான அஷ்ரபியா பத்வா அளித்துள்ளது. இது குறித்து அஷ்ரபியா மதரஸாவின் மவுலானா சலீம் அஷ்ரப் காஸ்மி கூறும் போது, சிலை வழிபாட்டை எதிர்க்கும் இஸ்லாத்தில், அல்லாவை தவிர வேறு எவரையும் வணங்குவோர் முஸ்லீம் அல்லாதவர். இதுபோன்றவர்கள் இஸ்லாத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவர் எனத் தெரிவித்தார். புக்கலின் செயல் சுயவிளம்பரம் என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கோவிந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து