முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெருசலேமில் பராகுவே தூதரகம் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      உலகம்
Image Unavailable

ஜெருசலேம்: அமெரிக்காவைப் பின்பற்றி, பராகுவேயும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகருக்கு மாற்றியுள்ளது.

அந்த நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற புதிய தூதரகத் திறப்பு விழாவில் பராகுவே அதிபர் ஹொராசியோ கர்டெஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் ஹொராசியோ கர்டெஸ் பேசியதாவது, ஜெருசலேமுக்கு பராகுவே தூதரகம் மாற்றப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இஸ்ரேலுடனான ஆழ்ந்த நட்பையும், அந்த நாட்டுக்கு பராகுவே அளிக்கும் முழுமையான ஆதரவையும் இந்த நிகழ்வு பறைசாற்றுகிறது என்றார் கர்டெஸ். பராகுவே தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்பட்டுள்ளதன் மூலம் விவசாயம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து