பினாமி பரிவர்த்தனை பற்றி தகவல் தெரிவித்தால் பரிசு!

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      வர்த்தகம்
income tax(N)

சட்டவிரோத பினாமி பரிவர்த்தனை மற்றும் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பான தகவல் தெரிவிப்போருக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசளிக்கும் திட்டத்தை வருமானவரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் பினாமி பரிவர்த்தனைகள் குறித்து தகவலளிப்போர் பரிசு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கக் கூடிய பினாமி பரிவர்த்தனை மற்றும் சொத்துகள் தொடர்பாக வெளிநாட்டினர் உட்பட யார் வேண்டுமானாலும் பினாமி பரிவர்த்தனை தடுப்பு பிரிவு இணை அல்லது துணை ஆணையர்களிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து