முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கூடாது: விரைவில் வருகிறது சட்ட மசோதா மத்திய அமைச்சர் ஜவடேகர் தகவல்

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, பள்ளிகளில் 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்ட மசோதா கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தகச் சுமையை குறைக்கவும், 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்காமல் இருக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துமாறு சென்னை ஐகோர்ட் கடந்த 30-ம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், ஜவடேகர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது,

சென்னை ஐகோர்ட் உத்தரவை வரவேற்கிறேன். அந்த உத்தரவை ஆய்வு செய்து வருகிறோம். தேவையான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்வோம். 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டுவர உள்ளோம்.

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் 2009-க்கு இணையாக இருக்கும் இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தடையின்றி நிறைவேறும் என்று நம்புகிறோம். குழந்தைகள் குதூகலத்துடன் கல்வி பயில வேண்டும் என்பதே நமது விருப்பம். கல்வி கற்பதில் அவர்களுக்கு எந்த நெருக்கடியும் அளிக்கப்படக் கூடாது என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். ஒரு பள்ளிக் குழந்தையின் புத்தகச் சுமையானது, அந்தக் குழந்தையின் எடையில் 10 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கடந்த மாதம் 30-ம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து