ஆர்.பி.ஐ கவர்னரிடம் பார்லி. நிலைக்குழு கேள்வி

செவ்வாய்க்கிழமை, 12 ஜூன் 2018      வர்த்தகம்
RBI 2017 10 21

ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள உர்ஜித் பட்டேல் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு முன்னிலையில் நேற்று ஆஜரானார். காங்கிரஸ் எம்.பி வீரப்ப மொய்லி தலைமையிலான இந்த நிலைக்குழுவில் உறுப்பினராக உள்ள பல்வேறு கட்சி எம்.பி.க்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு ஓடிய தொழிலதிபர்கள் குறித்து உர்ஜித் பட்டேலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், சமீபத்தில் ஏற்பட்ட ரூபாய் நோட்டு தட்டுப்பாடு, வங்கியில் கடன் பெறுவதற்கான விதிமுறைகளில் உள்ள கோளாறுகள் குறித்தும் கேள்வி எழுப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து