முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி ஆணைய விவகாரம்: சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்த பின் முடிவெடுப்பாராம் குமாரசாமி

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: காவிரி ஆணைய விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப் போவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புது டெல்லியில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் இருந்து செயல்படவுள்ளது.

மொத்தம் 9 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக உள்ள மசூத் ஹுசைன் தலைவர் மற்றும் செயலாளராக ஏ.எஸ்.கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தின் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் மற்றும் நீர்வளத்துறை நிர்வாகத்தின் செயலர் (பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர், பகுதிநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடக உறுப்பினர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

இது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை எங்களை கேட்காமலேயே மத்திய அரசு அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் விவாதம் நடத்திய பிறகு இக்குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு ஏற்கனவே கர்நாடகா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு எங்களின் பொறுமையை சோதிக்கிறது. இதில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து