ஒட்டன்சத்திரத்தில் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      திண்டுக்கல்
toilet news

 ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் கழிப்பறை விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. பெங்க;ர் நவ்ய திஷ்அறக்கட்டளை மற்றும் கிராமீன் கூட்டா இணைந்து கழிப்பறை குறித்த சமூக விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு கிராமீன் கூடு;டா உதவி மேலாளர் சீனிவாஸ்ஆஞ்சநேயரெட்டி தலைமை வகித்தார். நவ்ய திஶ்திட்ட மேலாளர் சுரே~; முன்னிலை வகித்தார். நவ்ய திஷ் வளர்ச்சி அதிகாரி விமல்ஜோசப் வரவேற்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பி.சந்திரன், மகளிர் காவல் ஆய்வாளர் கீதா, போக்குவரத்து ஆய்வாளர் பாபு, சுகாதார ஆய்வாளர் வீரபாகு ஆகியோர் கலந்து கொண்டு கழிப்பறை மற்றும் திறந்தவெளி மலம் கழிப்பவர்களை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினர். கூட்டத்தில் கிராமீன் கூட்டா அமைப்பின் உறுப்பினர்கள், 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் குமார் ஒருங்கிணைப்பு செய்தார். கிராமீன் கூட்டா மேலாளர் சக்தி நன்றி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து