முகப்பு

திண்டுக்கல்

ramalan

ரமலான் பண்டிகையை முன்னிட்டு உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு தொழுகை

28.Jun 2017

 திண்டுக்கல், -திண்டுக்கல்லில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும் உலக...

c

திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சியில் புதிய நவீன பூங்கா _அமைச்சர் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்

28.Jun 2017

திண்டுக்கல், -திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன ஞீங்கா மற்றும் நவீன பயிற்சி ...

odc news

தமிழகத்தில் சித்த மருத்துவத்திற்கு தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் பாரம்பரிய சித்த மருத்துவ மறுமலர்ச்சி மாநாட்டில் வலியுறுத்தல்

25.Jun 2017

ஒட்டன்சத்திரம்.-   தமிழகத்தில் சித்த மருத்துவதிற்கென தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என பாரம்பரிய சித்த மருத்துவ ...

mgr

நூற்றாண்டு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் வெளியிடப்படுகிறது

23.Jun 2017

திண்டுக்கல், -நூற்றாண்டு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் செய்தித்துறை வாகனங்கள் ...

kodai

கொடைக்கானல் மலைப்பகுதி கிராமத்திற்கு சூரியசக்தி தெரு விளக்கு வசதி

20.Jun 2017

கொடைக்கானல்- கொடைக்கானல் மலைப்பகுதி கிராமத்திற்கு சூரிய சக்தி தெரு விளக்கு வசதி ரோட்டரி சங்கம் சார்பில் செய்து ...

odc news 2

ஏழைகளுக்காக கொண்டாடப்படும் திருவிழா ரமலான் மூசா - பேச்சு

18.Jun 2017

ஓட்டன்சத்திரம், - ஏழை மக்களுக்காக கொண்டாடப்படும் திருவிழா தான் ரமலான் என்று திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் ...

odc news

ஒட்டன்சத்திரத்தில் விக்டோரியா அரசி காலத்து செம்பு நாணயம் கண்டுபிடிப்பு

18.Jun 2017

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்;டன்சத்திரத்தில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில அரசி விக்டோரியா மஹாராணி காலத்து ...

natham

செந்துறை பகுதியில் பொதுப்பணித்துறை குளங்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

17.Jun 2017

 நத்தம்,-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 48 கண்மாய் குளங்கள் உள்ளது. இதில் செந்துறை ...

odc accident

ஒட்டன்சத்திரம் அருகே மினி வேன் மோதி பெண்; பலி,

12.Jun 2017

ஒட்டன்சத்திரம்.ஜுன். ஒட்டன்சத்திரம் அருகே மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் பலியானாhர் மற்றொருவர் கவலைக்கிடமாக...

odc news

ஒட்டன்சத்திரம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் கணவன்,மனைவி சம்பவ இடத்திலேயே பலி

11.Jun 2017

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் அரசுப்பேருந்தும், காரும் நேருக்குநேர் ...

ramadass

ஒட்டன்சத்திரத்தில் முருங்கை ஆராய்ச்சி நிலையம் அமைத்து உலக அளவில் ஏற்றுமதி செய்வோம் டாக்டர்.அன்புமணிராமதாஸ் பேச்சு

11.Jun 2017

ஒட்டன்சத்திரம்.-  பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும், ஒட்டன்சத்திரத்தில் முருங்கை காய் ஆராய்ச்சி நிலையம் அமைத்து உலக ...

didugal

கொடைக்கானல் அருகே பெற்ற மகளை கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை திண்டுக்கல் கோர்ட் அதிரடி தீர்ப்பு

9.Jun 2017

திண்டுக்கல், -கொடைக்கானல் அருகே பெற்ற மகளை கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தைக்கு சாகும் வரை சிறைதண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட் ...

sitharam

சீத்தாராம் யெச்சூரி தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்.எஸ்.எஸ்.கொடும்பாவி எரிப்பு

8.Jun 2017

திண்டுக்கல், -சீத்தாராம் யெச்சூரி தாக்கப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்.எஸ்.எஸ். கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் ...

DGL

குஜிலியம்பாறை ஒன்றியத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களை பரமசிவம் எம்.எல்.ஏ வழங்கினார்

6.Jun 2017

குஜிலியம்பாறை :- குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 203 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை பரமசிவம் எம்.எல்.ஏ வழங்கினார். துமிழக அரசு ...

didugal

மாநில கூடைப்பந்தாட்டப் போட்டியில் வென்ற அணிகளுக்கு அமைச்சர் சி.சீனிவாசன் கோப்பை

5.Jun 2017

திண்டுக்கல்,-திண்டுக்கல்லில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வனத்துறை அமைச்சர் ...

g k

ஒட்டன்சத்திரத்தில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் ஜி.கே.மணி - பேச்சு

4.Jun 2017

ஒட்டன்சத்திரம்.- ஒட்டன்சத்திரத்தில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என ஒட்டன்சத்திரத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ...

Vaikai festival festival

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

1.Jun 2017

திண்டுக்கல், -பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று (1ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.முருகப்பெருமானின் 3ம் ...

dindugal

திண்டுக்கல் அருகே மார்பில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா

31.May 2017

திண்டுக்கல், -திண்டுக்கல் அருகே மார்பில் கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத திருவிழா ...

jalli

நத்தம் அருகே வீரசின்னம்பட்டியில் ஜல்லிக்கட்டு – 18 பேர் காயம்

28.May 2017

நத்தம்,-  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி வீரசின்னம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ கோட்டை    கருப்பணசாமி கோவில் ...

natham shopes

நத்தம் அருகே செந்துறை பகுதி கடைகளில்சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு

25.May 2017

   நத்தம்,-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பகுதிகளில் உள்ள கடைகளில் திண்டுக்கல் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வேற்று கிரகவாசிகளை அறிய ...

வேற்று கிரகங்களில் மக்கள் வாழ்கின்றனரா என்பதை அறிய ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்திற்கு வெளியே வாழக்கூடிய உயிரினங்கள் கூறித்து அது ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை வேற்றுகிரகவாசிகள் பூமியை ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  இதற்கு மனித இனம் இன்னும் முன்னேறாமல் இருப்பதே காரணமாம். அதாவது, இந்த பிரபஞ்சத்தில் பூமியில் உள்ள மனித இனம் மிக இளமையானதாக இருக்கிறதாம். ஒரு நாகரிகத்தின் தொடக்கம் குறைந்த பட்சம் 10 லட்சம் ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதாவது நாம் இன்னமும் ஒப்பிட்டளவில் சிம்பன்சிகளை போலவே தெரியலாம் என் ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.

உணவில் கவனம்

காரமான உணவுகள், இரைப்பையில் அமில சுரப்பை அதிகரித்து உடலை பரபரப்புடன் இருக்க செய்வதால் கோபத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது, காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுதல், பிஸ்கட், சிப்ஸ், சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஆல்கஹால் ஆகியவை கோபத்தை ஏற்படுத்தும்.

மதுவினால் தீமை

பெண்கள் மது குடிப்பதால் அதிக உடல்நல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். மேலும், குழந்தை உண்டாகும் வாய்ப்பு குறைவாகும். குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம்.

பீர்க்கங்காய் மகத்துவம்

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்.சொறி, சிரங்கு, புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, அந்த இடங்களில் வைத்துக் கட்டினால் குணமாகிவிடும்.  தோல் நோயாளிகள் இதை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைவாக குணமாகும்.

எளிய முறை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமலேயே டைப் செய்து, மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதற்கு, ஆண்ட்ராய்டில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் பேசினாலே டெக்ஸ்ட் டைப் செய்யப்படும். இதற்கு கீபோர்டு செயலியை ஓபன் செய்து, அதன் ஓரத்தில் காணப்படும் மைக்ரோபோன் பட்டனை அளித்தினால் போதும்.

ஆண்களின் குணம்

ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். இதன்மூலம், தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க முடியும் என நம்புகின்றனர். எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. புத்திசாலித்தனத்துடன் இருக்கும் பெண்களை பெரிதும் விரும்புவர்.

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

மடக்கும் பைக்

டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயாரிக்க ஆர்வம் பெருகியுள்ள நிலையில், கச்சிதமான எலெக்ட்ரிக் பைக்கினை ஷென்ஷென் எனும் சீன நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மாசர்க்கிள் எஸ் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பைக் சுமார் 7 கிலோ எடை கொண்டது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை 5 எளிய முறைகளைப் பயன்படுத்தி மடித்து நமது கைப்பைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதம் சிறபம்சம். 36 வோல்ட் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடுமாம். ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாசர்க்கிள் எஸ் 1 எலெக்ட்ரிக் பைக், 100 கிலோ எடை வரை தாங்குமாம்.  

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

திருமண பந்தம்

திருமணம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமாக, சுமார் 16 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் , திருமணம் ஆனவர்களை விட தனியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறைவான அளவே உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், திருமணம் ஆனவர்கள் விவாகரத்து பெறும்போது, அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நிறத்தை அதிகரிக்க

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.