முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எளிமையான ஜி.எஸ்.டி. வரி விதிமுறைக்கு மாற வேண்டும் இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் கோரிக்கை

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

புது டெல்லி:
இந்தியா, எளிமையான சரக்கு, சேவை வரி விதிமுறைக்கு மாற வேண்டும் என்று பன்னாட்டு நிதியம் வலியுறுத்தியுள்ளது.


இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து பன்னாட்டு நிதியம், ஆண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தியாவில் பல்வேறு வரி விதிப்புகளுக்கு மாற்றாக, ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்கும் விதமாகவும், ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும், இந்த வரி விதிப்பு முறை உள்ளது. எனினும், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் வரி விகிதம் அதிகமாகவும், பல அடுக்கு வரிகளுடன் சிக்கலான அமைப்பாகவும் உள்ளது.


இந்தியாவில், 5, 12, 18, 28 சதவீதம் என 4 வகையான வரிகள் விதிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை அமல்படுத்தியுள்ள 115 நாடுகளில், 49 நாடுகளில் ஒற்றை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. 28 இரட்டை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.


எனவே, இந்தியாவில் 4 அடுக்கு வரி விதிப்பால், நிர்வாகப் பணிகளும், அதற்கான செலவுகளும் அதிகமாகின்றன. எனவே, தற்போதைய ஜி.எஸ்.டி. வருவாயைக் குறைக்காமல், நிர்வாக செலவுகளைக் குறைக்கும் வகையில், எளிமையான வரி விதிப்பு முறைக்கு இந்தியா மாற வேண்டும். வருவாய் இழப்பின்றி வரி விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு உலக பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா இருக்கும் என்று பன்னாட்டு நிதியத்தின் இந்தியத் தலைவர் ரணில் சல்கடோ கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து