முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பாராமுல்லா என்கவுண்டர்: மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா வனப்பகுதியான ரபியாபாத்தில் பாதுகாப்புப் படையினரால் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பாராமுல்லா மாவட்டத்தின் வனப்பகுதியான ரபியாபாத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வந்தனர். இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து