முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி கரையோர மாவட்டங்களில் வினாடிக்கு 4 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டாலும் சமாளிக்க தயார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, : காவிரி கரையோர மாவட்டங்களில் வினாடிக்கு 4 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டாலும் சமாளிக்க தயாராக தமிழக அரசு இருக்கிறது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர் அறிவுறுத்தல்...

கபினி, கிருஷ்ணசாகர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி வினாடிக்கு வெளியேற்றப்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கிட்டத்தட்ட 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி வினாடிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பவானி சாகர் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் வெளியேற்றம் மற்றும் நீர் வரத்து குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இதில் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடனடியாக களத்திற்கு சென்று முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளார்.

சமாளிக்க தயாராக...

இப்போது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடி நீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. நம்மை பொறுத்தவரை 4 லட்சம் கன அடி நீர் வினாடிக்கு வந்தாலும் சமாளிக்க தயாராக இருக்கிறோம். கரையோர மாவட்டங்களில் 500 பேர் பேரிடர் மீட்பு படையும் தயாராக இருக்கிறது. நீர் வெளியேற்றம் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செ்ல்லவேண்டும் காவிரியோரத்தில் உள்ள பகுதிகளில் 36 முகாம்களி்ல் 2528 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வருவாய் நிர்வாகத்துறை சார்பில் அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் 24 மணிநேரம் இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுப்ட்டிருக்கிறார்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வதந்திகளை கேட்டு பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை மக்கள் அரசின் எச்சரிக்கைகளை உணர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து