முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் அணையில் இருந்து 2.05 லட்சம் கன அடி நீர் திறப்பு

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பால் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2.05 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

2-வது முறையாக...

கர்நாடகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழையின் தீவிரத்தால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில் அணைகள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. இதனால் அம்மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் தமிழகத்தை வந்தடைகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அணைகளும் ஓரளவு தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இருந்தாலும் தொடர் நீர்வரத்தால் உபரி நீர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது. தொடர் நீர் வரத்தால் மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பியது. அதிகளவு நீர் வெளியேற்றத்தால் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் காவிரி கரையின் கடைமடை பகுதிக்கும் சென்றதால் டெல்டா விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த நிலையில் நேற்று மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2.05 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1.85 லட்சம் கன அடியாக உள்ளது. இது வினாடிக்கு 2 லட்சம் கனஅடியாக மேலும் அதிகரிக்க வாய்புள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் அணையில் இருந்து 2.05 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர்மட்டம் 120.05 அடியாகவும், நீர்இருப்பு 93.55 டிஎம்சி.யாகவும் உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறப்பால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருச்சி முக்கொம்பிற்கு 2.34 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கொள்ளிடத்திற்கு 1.67 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹினி, மேட்டூர் அணை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. அணை குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் வதந்திகளை யாரும்  நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து