ஆசிய விளையாட்டு போட்டி 6-வது நாள்: டென்னிஸ் இரட்டையர் - துடுப்பு படகு போட்டிகளில் இந்திய அணிக்கு தங்கம்

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Rohan Bopanna - Divij Sharan clinch gold

ஜகார்த்தா, ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஆகியோர் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றனர். அதுபோல துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.

டென்னிஸ் இரட்டையர்...

45 நாடுகள் பங்கேற்றுள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய ஆடவர் டென்னிஸ் இரட்டையர் அணி, கஜகஸ்தான் அணியை  6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து இந்தியாவிற்கு 6-வது தங்கத்தை பெற்று கொடுத்தது.

துடுப்பு படகுப்போட்டி...

இதேபோல், துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. நேற்ரு நடைபெற்ற துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். 4  வீரர்கள் பங்கேற்கும் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இந்திய அணியில் ஸ்வரண் சிங், தத்து பாபன் போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6 நிமிடம் 17.13 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தனர். இந்தோனேசிய அணி வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்து அணி வெண்கலப் பதக்கமும் வென்றது.

இந்த வெற்றியின்மூலம் இந்தியா தற்போது வரை 6 தங்கம், 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து