ஆசிய விளையாட்டு: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Neeraj Chopra 2018 8 27

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

காமன் வெல்த்தில்...

9-வது நாளாக நேற்று தடகளத்தில் இந்தியா தனது பதக்க வேட்டையை தொடர்ந்தது. நேற்று ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ்சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. 24 வயதான அவர் உலக ஜூனியர், ஆசிய சாம்பியன் ஷிப், தெற்காசிய விளையாட்டு மற்றும் காமன் வெல்த்தில் தங்கம் வென்று இருக்கிறார். இதனால் முதல் முறையாக பங்கேற்கும் ஆசிய விளையாட்டிலும் நீரஜ்சோப்ரா தங்கம் வெல்வாரா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. அவர் 87.43 மீட்டர் தூரம் எறிந்ததே தேசிய சாதனையாக உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. நீரஜ்குமார் பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டி இந்திய நேரப்படி நேற்று மாலை 5.15 மணிக்கு தொடங்கியது. இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பில் 83.46 மீட்டர் தொலைவு தூரத்துக்கு வீசி தனது இறுதிச் சுற்றை தொடங்கினார்.
நீரஜ் சோப்ரா வீசிய தூரங்கள்:

முதல் வாய்ப்பு: 83.46 மீட்டர்
2-வது வாய்ப்பு: ஃபவுல்.
3-வது வாய்ப்பு: 88.06 மீட்டர்.
4-வது வாய்ப்பு: 83.25 மீட்டர்.
5-வது வாய்ப்பு: 86.36 மீட்டர்.
6-வது வாய்ப்பு: ஃபவுல்.

முதல் இந்திய வீரர்...

இதில், இவர் தனது 3-வது வாய்ப்பில் வீசிய 88.06 மீட்டர் வெற்றி தூரமாக அமைந்தது. சீனாவைச் சேர்ந்த லியூ அவருடைய வாய்ப்புகளில் அதிகபட்சமாக 82.22 மீட்டர் தூரம் எறிந்து 2-ஆவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம், ஆசியப் போட்டி ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

வாஜ்யாய்க்கு சமர்பிப்பு...

முன்னதாக, இந்திய வீரர் குர்தேஜ் சிங் 1982-இல் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஆசியப் போட்டி ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரராக குர்தேஜ் சிங் இருந்து வந்தார். இந்த வரிசையில் நீரஜ் சோப்ரா தற்போது இணைந்துள்ளார். இந்த வெற்றியை மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு சமர்பிப்பதாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து