மழை, வெள்ளத்துக்கு இந்தாண்டில் இதுவரை 1,276 பேர் பலி: மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      இந்தியா
central govt2018-08-25

 புது டெல்லி,இந்த ஆண்டில் மழை, வெள்ளம் போன்ற நிகழ்வுகளுக்கு இது வரை 1,276 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பருவமழை தீவிரம் அடைந்ததால் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா 8 மாநிலங்களில் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. கேரளாவைப் பொருத்தவரை, கடந்த ஜூலை மாதம் முதல் பெய்த மழைக்கு இதுவரை 443 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் 218 பேர் நிகழாண்டு மழை வெள்ளத்துக்கு பலியாகியுள்ளனர். இதேபோல், மேற்கு வங்கத்தில் 198, கர்நாடகாவில் 166, மகராஷ்டிராவில் 139, குஜராத்தில் 52, அசாமில் 49, நாகலாந்தில் 11 என மொத்தம் 1,276 பேர் மழை, வெள்ளத்துக்கு உயிரிழந்திருக்கின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து