முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் செப்டம்பர் 30-ம் தேதி எம்.ஜி.ஆா். நூற்றாண்டு நிறைவு விழா - தமிழக அரசாணையில் வெளியான தகவல்

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆா். நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் வரும் செப்டம்பா் 30-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பா் 22-ம் தேதி எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அரசாணை விவரம் வருமாறு:-

நிறைவு விழா

முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி தொடா்ந்து நடத்தப்பட்டு வந்தது. சில நிர்வாகக் காரணங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் இந்த விழாவை நடத்த இயலாமல் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது ஒத்திவைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை சென்னையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில்...

அதன்படி அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னா் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பா் 22-ம் தேதி எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அது போல, நூற்றாண்டு நிறைவு விழாவை சென்னையில் செப்டம்பா் 30-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு அரசு ஆணையிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாக்களின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

30 மாவட்டங்கள்...

தமிழக அரசு 30 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாக்களை மிக சிறப்பாக நடத்தியது. இதன் மூலம் தமிழக மக்களுக்கு 2,329 திட்டப் பணிகள் திறக்கப்பட்டு பலனடைந்திருக்கிறார்கள். 3,200 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 8.11 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாக்கள் மூலம் தமிழக மக்களுக்கு கிடைத்த திட்டங்கள் ஏராளம், ஏராளம். இந்த விழாக்களின் போது முதல்வரால் 521 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரூ. 5.397.52 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது கன்னியாகுமரியிலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் நடைபெறவுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து