எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி சமாதி நோக்கி பேரணி செல்லவுள்ள அழகிரியின் ஆதங்கத்திற்கு இன்று விடை கிடைக்குமா என்பது தெரிந்து விடும்.
கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மு.க.அழகிரி தனது குடும்பத்துடன் கருணாநிதியின் சமாதிக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் கலைஞரிடம் எனது ஆதங்கத்தை வேண்டினேன், தலைவரின் உண்மையான விசுவாமிக்க உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள், காலம் பதில் சொல்லும் என்றார். இந்த சம்பவத்திற்கு பின்பு தான் தி.மு.க. பொதுக்குழுவில் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பலத்தை நிரூபித்து கட்சியில் சேர அழகிரி முயற்சி கொள்வதாக அப்போது கூறப்பட்டது.
இதற்காக கருணாநிதி மறைந்த 30-வது நாளில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டி சென்னை அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஆதரவாளர்களை திரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அழகிரியின் திட்டத்தை முறியடிக்க கட்சியில் அதிருப்தியாக உள்ளவர்களை தி.மு.க. பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக கொண்டு வந்தார் ஸ்டாலின்.
அதிருப்தியாளர்களான முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் தங்கவேலன், தேனி மாவட்ட முன்னாள் செயலாளர் எல்.மூக்கைய்யா உள்ளிட்ட பலரை பொதுக்குழுவில் வாழ்த்துரையாற்ற வைத்தார். ஒருபுறம் ஸ்டாலின் அழைப்பை ஏற்று கட்சியில் இணக்கமாக இருப்பது போல் அதிருப்தியாளர்கள் காட்டிக் கொண்டாலும், மற்றொருபுறம் அழகிரியின் அமைதி பேரணிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர் என தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிப்படையாக முன்வர முடியாது என்பதால், பொருளாதார ரீதியான உதவிகளும், வாகனங்களில் தங்களுடைய ஊரில் இருந்து கணிசமான அளவில் ஆட்களை அனுப்புவதாகவும் உறுதியளித்துள்ளனர் என்ற பேச்சும் அடிபடுகிறது
மு.க.அழகிரி தலைமையில் 5-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணிக்கு அனுமதி கேட்டு, மதுரை மாநகர் தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவர் இசக்கி முத்து சென்னை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். ஆனால் பேரணி நடைபெறும் அன்றைய தினத்தில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் ஆசிரியர் தினம் நிகழ்ச்சி நடைபெறுவதால் பேரணியை மாலை 3 மணிக்கு மேல் நடத்தும்படி காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதால் வழக்கமாக, காலை 8 மணிக்குள் வெளியூரில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை மாநகரத்திற்குள் செல்ல அனுமதி உள்ளது. எனவே, வெளியூரில் இருந்து பேரணிக்கு வரும் வாகனங்கள் இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை நோக்கி வர அழகிரி ஆதரவாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


