ஒருமைப்பாட்டை குலைப்பதே பாகிஸ்தானின் நோக்கம்: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      உலகம்
united-nations 2017 10 24

நியூயார்க், இந்தியா ஒருமைப்பாட்டை பயங்கரவாதத்தின் மூலம் குலைப்பதே பாகிஸ்தானின் நோக்கம் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

ஐ.நா. சபையின் உயரதிகாரிகள் பங்குபெற்ற கூட்டம், அதன் தலைமையிடமான நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி, 

காஷ்மீரை இந்தியா தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதுடன், அங்கு வாழும் மக்களுக்கு அடிப்படை உரிமைகளையும் வழங்க மறுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீன மக்களைப் போலவே, காஷ்மீர் மக்களும் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர் என்று  பேசினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரிகளுள் ஒருவரான ஸ்ரீனிவாஸ் பிரசாத் கூறியதாவது:-

மக்களுக்கான உரிமைகளைப் பற்றியும், அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் மாநாடுகளில் பேசுவது மட்டும் போதாது. இந்தியா தனது அண்டை நாடுகளுடனும், மற்ற நாடுகளுடனும் பேணி வரும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குலைப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக பயங்கரவாதத்தையும், பயங்கரவாதக் குழுக்களையும் அந்நாடு ஆதரித்து வருகிறது.

காஷ்மீரிலுள்ள மக்கள் அனைவருக்கும், அனைத்து விதமான உரிமைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. உலக நாடுகளிடையே அமைதியை நிலைநாட்டுவதே இந்தியாவின் ஒரே கொள்கை. இந்த ஒருமைப்பாடே இந்தியா அமைதி வழியில் நடப்பதற்கான அடிப்படைக் காரணம் என்று பிரசாத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து