எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் வரவேற்றார். இன்று காலை வேலூர் பொற்கோவிலுக்கு செல்லும் துணை ஜனாதிபதி அங்கு சக்தி அம்மாவின் 50-வது பொன்விழா ஜெயந்தியில் பங்கேற்கிறார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் நேற்றும் (வெள்ளிக்கிழமை), இன்றும் (சனிக்கிழமை) சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். இதனை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து மற்றும் புத்தகம் ஒன்றையும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பரிசாக அளித்து வரவேற்றார்.
இதன்பிறகு அவர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்றார். இதனைத்தொடர்ந்து நட்சத்திர விடுதியில் நடைபெறும் விழாவில் பங்கேற்றார். மாலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் பொது வரவேற்பு விழாவிலும், அதனைத்தொடர்ந்து லோக் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி நடத்தும் குடிமை வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பின்னர் இன்று காலை அவர் வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார். அங்கு சக்தி அம்மாவின் 50-வது பொன்விழா ஜெயந்தியில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து பிற்பகலில் சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சித்தர் தின விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


