முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க் குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுத்தால் சர்வதேச குற்றவியல் கோர்ட்டுக்கு தடை விதிக்கப்படும்: அமெரிக்கா

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஆப்கானில் அமெரிக்க ராணுவத்தினரின் போர்க் குற்றங்கள் குறித்த நடவடிக்கை எடுத்தால் சர்வதேச குற்றவியல் கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டி இருப்பது, உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரோமில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ், நெதர்லாந்து நாட்டில் திஹேக் நகரில் 2002-ம் ஆண்டு முதல் சர்வதேச குற்றவியல் கோர்ட்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டில் 123 நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளன. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சேராமலும் இருக்கின்றன.

சர்வதேச கோர்ட்டின் வக்கீல் பாதோ பென்சவுடா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் செய்த போர்க்குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து போர்க்குற்றங்கள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இதை சர்வதேச கோர்ட்டு பரிசீலித்து வருகிறது.

மேலும், காசா மற்றும் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இஸ்ரேல் மீது விசாரிக்க பாலஸ்தீனம் சர்வதேச கோர்ட்டில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த இரண்டு பிரச்சினைகளும், அமெரிக்காவுக்கு சர்வதேச கோர்ட்டு மீது எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச கோர்ட்டை ஆப்கானிஸ்தானும் கேட்கவில்லை. சர்வதேச கோர்ட்டில் உறுப்பினர்களாக எந்தவொரு நாடும் கேட்கவில்லை. சர்வதேச கோர்ட்டு அமெரிக்க இறையாண்மைக்கு எதிராகவும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.

சர்வதேச கோர்ட்டு சட்ட விரோதமானது. எங்கள் குடிமக்களைக் காப்பதற்கு நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் சர்வதேச கோர்ட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்போம் என்றார்.

சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்னும் அமெரிக்காவின் மிரட்டல், உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து