முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று மதுரை வருகின்றனர்

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று மதுரை வருகிறார்கள்.

ஆலோசனை கூட்டம்

மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் வேலம்மாள் மருத்துவக்  கல்லூரி வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். அம்மா பேரவை மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

நிர்வாகிகள்...

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் உசிலம்பட்டி பி. நீதிபதி, மேலூர் பெரியபுள்ளான் (எ) செல்வம், சோழவந்தான் கே. மாணிக்கம், மதுரை தெற்கு எஸ்.எஸ். சரவணன், எம்.பி.க்கள் டி. ராதாகிருஷ்ணன், ஆர். கோபாலகிருஷ்ணன், ஆர். பார்த்திபன், மாநில அமைப்பு செயலாளர் எம். முத்துராமலிங்கம், மதுரை புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் கே. தமிழரசன், பேரவை மாநில இணை செயலாளர் மா. இளங்கோவன், பேரவை மாநில துணை செயலாளர் பா. வெற்றிவேல் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்கள்.

அமைச்சர்கள்...

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்கள். மேலும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன், கே.சி. கருப்பணன், கடம்பூர் செ. ராஜூ, கே.டி. ராஜேந்திர பாலாஜி, பா. பெஞ்சமின், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம். மணிகண்டன், வி.எம். ராஜலெட்சுமி, மாபா. பாண்டியராஜன், ஜி. பாஸ்கரன், எஸ். வளர்மதி, மாநில இளைஞரணி செயலாளர் என்.ஆர். சிவபதி, முன்னாள் அமைச்சர் எம். பரஞ்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

சிறப்பான வரவேற்பு

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை 7 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளின் சார்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறும் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு கூட்டத்தில் கலந்து கொண்டு திருப்பரங்குன்றம் தேர்தல் பணி குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார். 

அமைச்சர் ஆய்வு

இதனையொட்டி நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் இடத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, ஆகியோர். பார்வையிட்டனர் இதில் கழக அமைப்புச்செயலாளர் ம.முத்துராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள், எஸ்.எஸ்.சரவணன், பெரியபுள்ளான்(எ) செல்வம், மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழரசன், மாவட்ட கழக துணைச்செயலாளர் அய்யப்பன், மாவட்ட இளைஞர்அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன், ஒன்றிய கழக செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கழக துணைச்செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி கழக செயலாளர்கள் பன்னீர்;செல்வம், முனியாண்டி, கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர் பி.ஜபார், ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பொன்னுச்சாமி, பி.வெற்றிச்செழியன், அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து