சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      தமிழகம்
mgr named koyambedu busstand 2018 10 10

சென்னை : கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் நேற்று முதல் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் அறிவிப்பு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனம் பகுதியில் அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மேலும் சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் இனி புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என்கிற பெயரில் அழைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

2002-ம் ஆண்டு...

அதன்படி, கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பேருந்து நிலைய நுழைவு வாயிலில் புதிய பெயர் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை 2002-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து