முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை கழகத்தில் அ தி.மு.க. 47-வது ஆண்டு துவக்க விழா: வரும் 17-ம் தேதி எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ தி.மு.க. 47-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி வரும் 17-ம் தேதி அன்று சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.கழக கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்குகிறார்கள்.

46 ஆண்டுகள் நிறைவு

இது குறித்து அ தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அ தி.மு.க. தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17-ம் தேதி - புதன் கிழமை அன்று 47-வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில் அன்று காலை 10 மணி அளவில், அ தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.; கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்ககின்றனர்.

குடும்ப நல நிதி உதவி

அதனைத் தொடர்ந்து, கழகப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி மற்றும் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளவாறு, மரணமடைந்த கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியுதவியையும்; விபத்துக்குள்ளாகி காயமடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியையும், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழங்க உள்ளார்கள்.

நிர்வாகிகள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சிகளில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு அ தி.மு.க. தலைமை கழகம் இதனை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து