முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

லிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பைக் ஓட்டுபவர்கள் பயன் அடையும் வகையில் கூகுள் மேப்பில் அவர்களுக்காக சில வசதிகள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கூகுள் மேப்பில் உள்ள கூகுள் ஸ்ட்ரீட் வியூ வசதி மிகவும் பிரபலம் ஆனது. மக்கள் நேரடியாக சென்று சாலையில் நடப்பது போன்ற உணர்வை இந்த ஸ்ட்ரீட் வியூ கொடுக்கும்.

இந்த நிலையில் பெரு நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் அங்கு இருக்கும் பிரபலமான பாலம் ஒன்றை கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ மூலம் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டு வெறுமனே திறந்து பார்த்துள்ளார். அப்போது அந்த பாலத்தின் மேல் இவர் மனைவி இருந்துள்ளார். அவர் வேறு ஆணுடன் கட்டியணைத்தபடி நின்றுள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விளக்கம் கேட்டுள்ளார் கணவர். இந்த பிரச்சனை பெரிதாகவே கடைசியில் அவர்கள் இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து