முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

டெஹ்ரான், ஈரானில் ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்று அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி பேசும் போது,

தற்போதுள்ள அமெரிக்க அரசு ஈரானுடன் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத விரோதத்தை கடைப்பிடிக்கிறது. ஒருவர் மட்டும் எதிரியாக இருந்து கொண்டு மீதமுள்ளவர்கள் அவரை வழி நடத்திய காலம் ஒன்று இருந்தது. ஆனால் தற்போது மோசமான அனைவரும் இணைந்து கொண்டுள்ளனர். அமெரிக்கா ஈரானில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறது. அமெரிக்காவால் ஈரான் ஏற்றுமதியை பூஜ்யமாக குறைக்க இயலாது. எண்ணெய் தேவையை ஈரானுக்கு பதில் சவுதி ஈடுசெய்யும் என்று அமெரிக்கா கருதுகிறது. ஆனால் ஈரானின் எண்ணெய் தற்போது 80 டாலைரை எட்டியுள்ளது. ஏற்றுமதியில் ஈரான் முன்னர் எந்த அளவு வருமானம் ஈட்டியதோ அதே அளவு வருமானத்தை தற்போதும் பெறுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து