முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் போராட்டம் நடத்தியதாக 1407 பேர் கைது கேரள அரசு நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக 1407 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்தன.

மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டிருந்த போதும் அங்கு சென்ற பெண்களை போராட்டக்காரர்கள் அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர். கோவிலுக்கு வர முயன்ற பெண்களும்  திருப்பி அனுப்பி விடப்பட்டனர். கோவில் நடை திறந்திருந்த 5 நாட்களும் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை.இந்த நிலையில் ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் இதுவரை 1407 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா முழுவதும் நேற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. போராட்டம் நடத்தியது தொடர்பாக மொத்தம் 440 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து