முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜே.பி.சி விசாரணைக்கு உத்தரவிட்டால் ரபேல் பற்றிய முழு உண்மையும் வெளிவரும்:ராகுல் காந்தி

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,நாடாளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டால் ரபேல் முழு உண்மையும் வெளியே வரும் என்றும், ரபேல் ஊழல் விவகாரத்தில் அனில்அம்பானியின் நிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் முதல்கட்டமாக 284 கோடி ரூபாயை லஞ்ச தொகையை கமிஷனாக பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெறுமோ என்ற அச்சத்தில் பிரதமர் மோடி இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்து வருகிறார் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊழல் செய்துள்ளதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. டிசால்ட் ஏவியேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலத்துக்காக அந்த தொகை தரப்பட்டதாக கூறியுள்ளார்.ஆனால் டிசால்ட் நிறுவனம் லஞ்சமாக அளித்த 284 கோடி ரூபாய் தொகையை வைத்து தான் அனில் அம்பானி அந்த நிலத்தை வாங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுனவத்துக்கு டிசாலட் நிறுவனம் 284 கோடி ரூபாய் தர வேண்டிய காரணம் என்ன? எனவே டிசால்ட் நிறுவன அதிகாரி பொய் சொல்கிறார்.

இந்த ஒப்பந்தமே பிரதமர் மோடி, அனில் அம்பானி என்ற இரு நபர்களுக்கிடையே செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு இந்த ஒப்பந்தத்தைசெய்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சரான மனோகர் பாரீக்கர் இதில் தலையிடவில்லை. பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்த பிறகு பாரீக்கர் இந்த விவகாரங்களில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.நாடாளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டால் முழு உண்மையும் வெளியே வரும். இந்த விவகாரம் தெரிந்ததால் தான் சி.பி.ஐ. இயக்குனர் நீக்கப்பட்டார். ரபேல் விவகாரத்தில் விசாரணை நடைபெறுமோ என்ற அச்சத்தில் இரவு முழுவதும் தூங்காமல் பிரதமர் மோடி தவித்து வருகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து