முதல் டி- 20 போட்டியில் வெற்றி- பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      விளையாட்டு
rohit sharma 2018 3 7

கொல்கத்தா,வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா வெற்றி....வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்தான் எடுக்க முடிந்தது. ஆலன் அதிகபட்சமாக 27 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், கலீல் அகமது, பும்ரா, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தினேஷ் கார்த்திக் 34 பந்தில் 31 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), குருணால் பாண்டியா 9 பந்தில் 21 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர். ஒஷானே தாமஸ், பிராத் வெயிட் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-பந்துவீச்சுக்கு நேர்த்தியான இந்த ஆடுகளத்தில் பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த பிட்சில் ரன் சேஸ் செய்வது சவாலனதே. ஆனாலும் பேட்ஸ்மேன்கள் சில பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் புதுமுக வீரர் தாமஸ் அபாரமாக பந்து வீசினார். அவரது திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.குருணால் பாண்டியா மிகவும் அற்புதமான திறமை வாய்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இக்கட்டான நேரத்தில் அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதை செயல்படுத்தக்கூடியவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா முன்னிலை...இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில்முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி லக்னோவில் நாளை நடக்கிறது. இதில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து