முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திரளான பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இதே போல் திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நான்காம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். 7.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து, தீபாராதனைநடைபெற்றவுடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக சண்முகவிலாச மண்டபத்தை அடைந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி வலம் வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று 13-ம் தேதி மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் ஒரு மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும். இதை காண்பதற்காக நேற்று முன்தினம் முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வரும் 14-ம் தேதி காலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து