முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலைக்கழகம் வழங்குகின்ற சான்றிதழ்களிலும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது அவசியம் அழகப்பா துணைவேந்தர் பேச்சு:

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி.-  அழகப்பா பல்கலைக்கழக இணையக் கல்வி மையத்தின் சார்பில் “தேசிய கல்வி ஆவண வைப்பு” என்ற தலைப்பில் நேற்று பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக கருத்தரங்க அறையில் நடைப்பெற்றது.
  பல்கலைக்கழக தேர்வாணையர் முனைவர்.கே.உதயசூரியன் வரவேற்புரை ஆற்றினாh அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் இப்பயிற்சி பட்டறையை துவக்கி வைத்தார்.  அவர் தமது உரையில், இதுபோன்ற பயிற்சி பட்டறை அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஒரு நீண்ட கால தேவையாக உள்ளது என்றார்.  அழகப்பா பல்கலைக்கழகம் தேசிய மற்றும் உலக அரங்கில் பல்வேறு அங்கீகாரங்களை பெற்று வரும் வேளையில் தேர்வு மற்றும் பல்கலைக்கழகம் வழங்குகின்ற சான்றிதழ்களிலும் நவீன காலத்திற்கேற்றார்ப்போல் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது அவசியம் என்றார்.  இதனடிப்படையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய கல்வி ஆவண காப்பகத்தின் துணையோடு அழகப்பா பல்கலைக்கழகம் வழங்குகின்ற மதிப்பெண், பட்டயம் மற்றும் பட்டச் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது என்றார்.  மேலும் அவர் இந்த இயங்குதளத்தில் மாணவர்களின் பதிவு முடிந்து தற்பொழுது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் நிலைக்கு முன்னேறி உள்ளோம்.  இப்பதிவேற்றம் முழுதாக முடிந்து தேசிய ஆவண காப்பகத்தில் ஒப்புதல் பெறப்பட்டபின், ஒரு மாணவர் இயற்கை பேரிடர் மற்றும் ஏதேனும் ஒரு அசம்பாவிதத்தில் தனது சான்றிதழ்களை இழக்கும்பட்சத்தில் தன்னுடைய நகல் சான்றிதழ்களை பெறுவதில் உள்ள நடைமுறைகள் மற்றும் தன்னுடைய சான்றிதழ்களின் உண்மைத்தன்மை நிருபணம் செய்வதில் உள்ள நீண்ட நடைமுறைகளும் வெகுவாக குறைந்துவிடும் என்றார்.  இதன் மூலம் மாணவர்கள் தங்களது நகல் சான்றிதழ்களை எளிதில் பெற முடியும் என்றார்.  அதோடு போலி மதிப்பெண் மற்றும் பட்டச் சான்றிதழ்களை எளிதாக இனங்கண்டறியவும் முடியும்” என்றார்.
  இப்பயிற்சி பட்டறையை தேசிய ஆவண பாதுகாப்பு வைப்பு நிறுவனத்தின் உதவி மேலாளர் திரு.பிரசாந்த் அவர்கள் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார்.  அவர் தனது உரையில், “மாணவர்கள், அவர்கள் பயிலும் நிறுவனம் மற்றும் தேசிய ஆவண காப்பகம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியால்தான் சான்றிதழ்களை ஆவணப்படுத்துவது சாத்தியமாகும் என்றார்.  மேலும் அவர் கூறுகையில் அழகப்பா பல்கலைக்கழகமானது மற்ற கல்வி நிறுவனங்களைக் காட்டிலும் சான்றிதழ்களை ஆவணப்படுத்துதலில் அதிக முனைப்போடு செயல்படுவதாக குறிப்பிட்டார்.  இந்த இயங்குதளத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி அடையாள எண்ணுடன் நிர்வகிக்கப்படுவதால் சான்றிதழ்களின் நம்பகத்தன்மை பற்றிய பயம் ஏதும் தேவையில்லை என்றார்.
   இணையவழி கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பாஸ்கரன் நன்றியுரை ஆற்றினார்.  துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆர்.இராம்நாத் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து