முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை: மாயாவதி திட்ட வட்டம்

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் அஜீத் ஜோகியுடன் இணைந்து தான் அமைத்துள்ள கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

பாஜக ஆட்சியில் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுடன் மாயாவதி கூட்டணி அமைப்பார் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும், அவர் அந்த மாநில முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜேசிசி) கட்சியுடன் கூட்டணி அமைத்தார். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஜேசிசி 55 இடங்களிலும், பகுஜன் சமாஜ் மீதமுள்ள இடங்களிலும் போட்டியிடுகின்றன. இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அஜீத் ஜோகி அறிவிக்கப்பட்டார். கடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு சத்தீஸ்கரில் ஒரு எம்.எல்.ஏ மட்டும் இருந்தார்.

இந்நிலையில் சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது. அடுத்த கட்டமாக மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் செய்தித் தொலைக்காட்சிக்கு  பேட்டியளித்த மாயாவதி கூறியதாவது:

சத்தீஸ்கரில் எங்கள் கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா? என்ற கேள்விக்கு இடமில்லை. தேர்தல் நடைபெறும் நேரத்தில் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவது எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு எதிரான சதியாகவே கருத வேண்டியுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுமே ஏழை, எளிய மக்கள், தலித், விவசாயிகளுக்கு எதிரானவை. எனவே, இவர்களுடன் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து