முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்ப்பு? ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்குவது குறித்து அடுத்த வாரத்தில் இறுதி முடிவு

சனிக்கிழமை, 17 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் விதமாக ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடையை நீக்குவது குறித்து அடுத்த வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓராண்டு தடை

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சுமித், வார்னர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கவது குறித்து அடுத்த வாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவு எடுக்க உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தென் ஆப்ரிக்க டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர்கள் சர்ச்சையில் சிக்கினர். இதில், அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்த பான்கிராஃப்ட்-க்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

வலியுறுத்தல்...

இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஸ்டீவ் சுமித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் தடைக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி வரை உள்ளது. அதேபோல், பான்கிராஃப்ட் மீதான தடைக்காலம் வரும் டிசம்பர் மாதம் 29-ம் தேதி முடிவடைகிறது.

வெற்றி பாதிக்கிறது...

கடந்த 7-ம் தேதி ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்கக்கோரி, அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்கம் சார்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த மனுவில், “பந்தை சேதப்படுத்திய நிகழ்வு கிரிக்கெட்டின் புனித தன்மையை கெடுப்பதாக எடுத்துக் கொண்டாலும், வீரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடுமையான தண்டனையால் அணியின் வெற்றி பாதிக்கிறது” என்று கூறப்பட்டு இருந்தது.

படுதோல்வி...

அதேபோல், ஆஸ்திரேலிய அணியும் தொடர் தோல்விகளால் மோசமான நிலையில் உள்ளது. இதனை அடுத்து, புதிதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கெவின் ராபெர்ட்ஸ், இவர்கள் மீதான தடையை நீக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்மையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்தது. இதை கவனத்தில் கொண்டு இந்தியா உடனான தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது. இதனால், ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடையை நீக்குவது குறித்து அடுத்த வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து