முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் கலவரம்: மோடிக்கு எதிரான வழக்கு 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, பிரதமர் மோடி உள்ளிட்ட 59 பேருக்கு தொடர்பில்லை என விடுவித்ததை எதிர்த்து முன்னாள் எம்.பி.யின் மனைவி ஜாகியா ஜாப்ரி என்ற தொடர்ந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா எனுமிடத்தில் கரசேகவர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீவைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினார்கள். இதையடுத்து நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தச் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் அப்போது முதல்வராக இருந்த மோடி, போலீஸ் அதிகாரிகள் பலர் உள்ளிட்ட 59 பேர் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை என தெரிவித்தது.இந்த அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மற்றும் குஜராத் ஐகோர்ட்டில் ஜாகியா ஜாப்ரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் ஜாகியா ஜாப்ரியும், சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி கான்வில்கர் முன்னிலையில் கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்த விசாரணை 19-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி, இந்த மனு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து  வரும் 26-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து