முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் சேத மதிப்பிடும் பணி இரவு, பகலாக நடைப்பெற்று வருகிறது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை : புயல் சேத மதிப்பிடும் பணி இரவு, பகலாக நடைப்பெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று இரவு சென்னை எழிலகத்தில் உள்ள அவரசக் கட்டுபாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் வருவாய் நிர்வாகக ஆணையர் சத்ய கோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னோ உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாங்கள் சாலை வழியாக வரும்போது கூட மழை பெய்து கொண்டிருந்தது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவடங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. இது புயலாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்றும், காற்று பலமாக வீசாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை. மழை காரணமாக நிவாரணப்பணிகளில் எந்த தொய்வும் ஏற்படாது, மற்றபடி மின்கம்பங்களை சீரமைத்தல் போன்ற மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்படலாம். புயல் நிவாரண நிதிக்கா முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து மனு அளிக்க இருக்கிறார். புயல் மற்றும் மழை குறித்து தற்காலிக சீரமைப்பு மற்றும் நிரந்தர சீரமைப்புக்காக முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை விடுக்க இருக்கிறார். இதற்காக மனுக்கள் தயாரிக்கும் பணி இரவு, பகலாக தயாராகி வருகிறது. இந்த பணிகளில் வருவாய்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சேத கணகீட்டை இணைத்து பிரதமரிடம் மனு அளிக்கப்படும். தற்போது, மத்திய அரசின் பேரிடர் நிதிகளுக்கு உட்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. எட்டு வழிச்சாலை தொடர்பாக நிலம் கையகப்படுத்தப்படும் போது வழங்கப்படும் இழப்பீடும் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டே வழங்கப்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஏன் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட உடனே செல்லவில்லை என்று கேட்டார். தற்போது நவீன தொழில்நுட்பத்தில் உடனுக்குடன் கைபேசி மூலம் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நாகை மாவட்டத்தில் 2 தொகுதிகளில் 184 பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் அடுத்த நிமிடமே தெரிய வந்தது. இது எதிர்க்கட்சி தலைவருக்கும் கூட தெரியும். எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தயாராக இருந்தோம். 4,039 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் இடங்கள் என்று கண்டறிந்து அதற்காக தயார் நிலையில் இருந்தோம். இப்போது மக்களை மீட்கும் மகத்தான பணியில் ஈடுபட வேண்டும் கருத்து மோதல்கள் மற்றும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தால் மீட்பு பணியில் இருக்கும் இளைஞர்கள் சோர்ந்து விடுவார்கள். நம்முடைய மீட்பு பணிகள் முழுவதும் முடிந்த பின் விமர்சனங்களை வைத்துக்கொள்ளாம். இது தேர்தல் களம் அல்ல. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் 45 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறார். 5 முறை ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளார். எனவே மீட்பு பணிகள் முடிந்த பிறகு விமர்சனங்களை வைத்துக்கொள்ளலாம்.
வைகோ பாராட்டு குறித்து எழப்பப்பட்ட கேள்விக்கு, நாங்கள் நிவாரண முகாம்கள் அமைத்தபோது, வெயில் அடிக்கும் போது முகாம்கள் அமைக்கிறீர்கள் என்று கேளி செய்தனர். இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என்று விமர்சனம் செய்தனர். வைகோ மிகுந்த அனுபவம் உள்ளவர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்று பாராட்டினார். அவரது நல்ல வார்த்தை எனது பணியை மேலும் சிறக்க செய்யும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து