எங்களை தடுத்து நிறுத்தினால்... அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல்

புதன்கிழமை, 5 டிசம்பர் 2018      உலகம்
IranPresident 2018 12 05

டெஹ்ரான் : எங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா நிறுத்தினால், வேறு எந்த கல்ப் நாடுகளும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாது என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

இது குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி பேசும் போது,

ஈரான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை அமெரிக்காவால் தடுத்து நிறுத்த முடியாது. ஒருவேளை கல்ப் நாடுகளின் கடல் பாதையில் ஈரானின் கப்பலை தடுக்க முயன்றால், அந்தப் பாதையே அடைக்கப்படும். அமெரிக்காவுக்கு நாங்கள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது நன்கு தெரியும். தொடர்ந்து நாங்கள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வோம். அவர்களால் அதனைத் தடுக்க முடியாது. எனினும் ஒரு நாள் எங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அவர்கள் தடுக்க எண்ணினால் வேறு யாரும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாது என்று கூறினார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து