முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலககோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்

சனிக்கிழமை, 15 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புவனேஸ்வர் : உலககோப்பை ஹாக்கியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 6-0 என்ற கணக்கில் தோற்கடித்த பெல்ஜியம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முன்னிலை...

14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் நேற்று தொடங்கின. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பெல்ஜியம் வீரர் டாம் பூன் 8-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 19வது நிமிடத்திலும் பெல்ஜியம் வீரர் சைமன் கோக்னார்டு ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

பெல்ஜியம் அதிரடி...

ஆட்டத்தின் 2-வது பாதியிலும் பெல்ஜியம் வீரர்கள் அதிரடியாக ஆடினர். 37வது நிமிடத்தில் செட்ரிக் சார்ப்லியர் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து, ஆட்டத்தின் 45 மற்றும் 50வது நிமிடத்தில் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் தலா ஒரு கோல் அடித்தார். 53வது நிமிடத்தில் செபாஸ்டியன் டாகியர் ஒரு கோல் அடித்தார். பெல்ஜியம் வீரர்களின் அதிரடி ஆட்டத்துக்கு இங்கிலாந்து வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இங்கிலாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

அபார வெற்றி...

இறுதியில், பெல்ஜியம் அணி இங்கிலாந்தை 6 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து