சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காங்கிரசில் இருந்து விலகினார்

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      அரசியல்
Sajjan Kumar Congress 2018 12 18

புது டெல்லி, சீக்கியர்கள் எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப் பட்டார். அவர் சீக்கிய காவலர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பையடுத்து காங்கிரசை, பா.ஜ.க.வும், அகாலிதளமும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் குற்ற வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சஜ்ஜன் குமார் அறிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், தண்டனை பெற்றுள்ளதால் கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்றும், காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விலகுவதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து