முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி படிப்பவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. -சுஷ்மா சுவராஜ் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ‘பிராந்திய மொழிக்கு நிகராக தென்னிந்தியாவில் இந்தி மொழி வளர்ச்சி அடைந்து வருகிறது’ என்று சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசினார். 

தென்னிந்திய இந்தி பிரசார சபையின் 82-வது பட்டமளிப்பு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள சபை வளாகத்தில்  நடந்தது. சபை தலைவரும், வேந்தருமான நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமை தாங்கினார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் பட்டங்களை வழங்கி மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:-

தென்னிந்திய இந்தி பிரசார சபை நூறு ஆண்டுகள் சேவை செய்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. மொழி என்பது கடவுள் மனிதனுக்கு கொடுத்த வரப்பிரசாதமாகும். மொழி மூலம் தான் ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய கருத்துகளை பரிமாறிக் கொள்ள முடியும். மொழியின் வளர்ச்சியில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியால் கலாசார வளர்ச்சி, நாகரிகத்தின் வளர்ச்சிகள் அடங்கி உள்ளன.

வடஇந்தியாவில் பல பகுதிகளில் பேசுவதற்கும், புரிந்து கொள்வதற்கும் இந்தி மொழி உதவுகிறது. ஆனால் தென்னிந்தியாவில் சில பகுதிகளில் இந்தி மொழி பேசப்படுவதில்லை. 

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடியும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் பேசி உள்ளார். நானும் ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்தியில் தான் பேசுகிறேன். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களிடமும் இந்தியில் தான் பேசுகிறோம். இதன் மூலம் உலகளவில் இந்தி மொழிக்கு நாளுக்கு நாள் ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி பல வெளிநாட்டினர் தாங்களும் இந்தி படிப்பதற்காக தங்கள் நாடுகளில் இந்தி அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்காது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறி ஊடகங்கள் மற்றும் விளம்பரத்துறைகளில் இந்தி படிப்பவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. டுவிட்டர், பேஸ் புக் ஆகியவற்றிலும் இந்தி மொழி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தென்னிந்தியாவிலும் பிராந்திய மொழிக்கு நிகராக இந்தி மொழியும் வளர்ச்சி அடைந்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து