முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலிக்கு செல்லட்டும்! அமேதிக்கு சென்ற ராகுலுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

அமேதி, தனது சொந்த தொகுதியான அமேதிக்கு சென்ற ராகுல் காந்திக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதிக்கு சென்றார். அங்குள்ள கவுரிகாஞ்ச் நகரத்திற்கு ராகுல் சென்ற போது, அங்குள்ள விவசாயிகள் ராகுலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜீவ் காந்தி பவுண்டேஷன் அமைப்புக்கு வழங்கிய நிலத்தை திருப்பி கொடுங்கள் அல்லது வேலைவாய்ப்பு கொடுங்கள் எனக்கூறி ராகுலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் கூறும் போது, ராகுல் காந்தியால் நாங்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம். அவர் இத்தாலிக்கே செல்லட்டும். இங்கிருக்க அவருக்கு தகுதியில்லை. எங்களின் நிலத்தை அவர் பறித்து கொண்டார் என கூறினார். முன்னதாக உத்தரபிரதேசத்தில் விவசாயிகளின் நிலத்தை ராகுல் காந்தி, அறக்கட்டளை மூலம் பிடுங்கி கொண்டுள்ளதாக ஸ்மிருதி இரானியும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து