முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்களை விடுவிக்க 158 கடிதங்களை எழுதியவர் முதல்வர் அமைச்சர் ஜெயகுமார் தகவல்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை 158 கடிதங்களை எழுதியுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் தமிமுன் அன்சாரி பேசுகையில் நாகப்பட்டினம் அருகே கடந்த 9ம் தேதி ஏழு மீன்வர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்களை விடுவிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் 21 மீனவர்களும் 20 படகுகளும் மீட்கப்படாமல் இருக்கிறார்கள். மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இது வரை பிரதமருக்கும், வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 158 கடிதங்கள் எழுதியுள்ளனர். அரசு மேற்கொண்ட இடைவிடாத முயற்சியால் 587 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர், 206 படகுகள் மீட்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினத்தில் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து