முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி - திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட சாலைகள், நான்கு ஆற்றுப் பாலங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, திருநெல்வேலி, விருதுநகர், கடலூர், திருவாரூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 332 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலைப் பணி, 4 ஆற்றுப்பாலங்கள் மற்றும் ரயில்வே கடவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

திருநெல்வேலி, இராஜபாளையம் மற்றும் சங்கரன்கோவில் நகரங்களில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் 286 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 75.288 கி.மீ. நீள ராஜபாளையம், சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலி சாலைப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மேலும் திருவாரூர் மாவட்டம், வையகளத்தூரில் உள்ள நீடாமங்கலம் - கொரடாச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கடவுக்கு மாற்றாக 27 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம், விருதுநகர் மாவட்டம், சித்துராஜபுரம் - விளாம்பட்டி சாலையில் போட்ரெட்டியாபட்டியில் காட்டு ஓடையின் குறுக்கே ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ஆமத்தூர் - லெட்சுமியாபுரம் சாலையில் ரெங்கபாளையத்தில் காட்டு ஓடையின் குறுக்கே ஒரு கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், கடலூர் மாவட்டம், நல்லூர் - இலங்கியனூர் சாலையில் மணிமுக்தாறு ஆற்றின் குறுக்கே 12 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில், பம்மதுகுளம் உபரி நீர் கால்வாயின் குறுக்கே 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் ரூ. 332 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ். கே. பிரபாகர், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் திட்ட இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) டாக்டர் அருண் தம்புராஜ், தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச்சாலைகள்) செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து