முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு 1,600 போலீசார் பாதுகாப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

 திருவண்ணாமலை : திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு 2 சிறப்பு எஸ்.பி.க்கள் தலைமையில் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று டி.ஜ.ஜி. வனிதா தெரிவித்தார்.

 தமிழகத்தில் நாளை 18-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடத்த துணை ராணுவம், போலீசார் என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சித்ரா பவுர்ணமி தினத்திலேயே, பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.சித்ரா பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலையில் அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

இதனால் தேர்தல் மற்றும் சித்ரா பவுர்ணமி என்று தனித்தனியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.   

சித்ரா பவுர்ணமிக்கு முத்தரசி, ஷியாமளா ஆகிய 2 சிறப்பு எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில், கிரிவலம், போக்குவரத்து என்று 3 ஆக பிரித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.   

இதில் கோவிலுக்கு மட்டும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சித்ரா பவுர்ணமிக்கு மட்டும் தனியாக 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று டி.ஐ.ஜி வனிதா தெரிவித்தார்.

சித்ரா பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலைக்கு 2895 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  
இந்த பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை செல்ல 61 சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.

மேலும் காவல் உதவி மையங்கள் அமைத்து பக்தர்களுக்கும் உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து