முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோவையை சேர்ந்த 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

7 வயது பெண் குழந்தை...

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கோயம்புத்தூர் மாவட்டம், வடக்கு வட்டம் பன்னிமடை கிராமம், கஸ்தூரி நாய்க்கன் புதூர் மஜார் திப்பனூர் பகுதியை சேர்ந்த ஏழு வயது பெண்குழந்தை, கடந்த மார்ச் 25ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.

துரித நடவடிக்கை...

இந்த கொடுர செயலுக்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி உரியதண்டனையை பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவருடைய குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து