நான்கு தொகுதி இடைத்தேர்தலில் மே 1- ம்தேதி முதல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் - 8 நாட்களில் 54 இடங்களில் பேசும் பட்டியல் வெளியீடு

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

சென்னை : நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வரும் மே 1 - ம்தேதி முதல் 14 ம்தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு 8 நாட்களில் 54 இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்தி்க்குறிப்பு வருமாறு :-

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் மே மாதம் 19 ம்தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி வருகின்ற மே 1- ம்தேதி முதல் 14 - ம்தேதி வரை, சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில், பின்வருமாறு அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

வரும் மே 1 ம்தேதி சூலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரம் செய்யும் இடங்கள் பட்டியல்:-

மாலை 5 மணி ஜல்லிப்பட்டி, மாலை 6.15 செஞ்சேரிமலை ,மாலை 6.45 சுல்தான்பேட்டை , இரவு 7.45 செலக்கரிச்சல் , இரவு 8.45 பாப்பம்பட்டி , இரவு 9.20 பாப்பம்பட்டி பிரிவு.
வரும் 5 - ம் தேதி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரசாரம் செய்யும் இடங்கள்:-
மாலை 5 மணி தளவாபாளையம் ,மாலை 5.45 வேலாயுதம்பாளையம், மாலை 6.30 புன்னம் சத்திரம், இரவு 7.15 க. பரமத்தி, இரவு 8 தென்னிலை,  இரவு 8.45 சின்னதாராபுரம், இரவு 9.15 நஞ்சைகாளகுறிச்சி.
வரும் 6 - ம்தேதி திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டி யை ஆதரித்து முதல்வர் பிரசாரம் செய்யும் இடங்கள்:-
மாலை 5 மணி வீரகனூர், மாலை 5.45 ஐராவதநல்லூர் (வார்டு 55), மாலை 6.30 சிந்தாமணி, இரவு 7.30 வளையங்குளம், இரவு 8 பெருங்குடி,  இரவு 8.45  அவனியாபுரம் பஸ் நிலையம் ( வார்டு 60 & 94 ),  இரவு 9.20 அவனியாபுரம் எம்.எம்.எஸ்.காலனி ( வார்டு 59, 61, 62 ).
7 - ம்தேதி ஓட்டப்பிடாரம் அ.தி.மு.க. வேட்பாளர் பெ. மோகனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்கள்:-
மாலை 5 மணி ஒட்டப்பிடாரம், மாலை 5.40 புதியம்புத்தூர்,மாலை 6.20  தருவைக்குளம், இரவு 7 மாப்பிள்ளை ஊரணி, இரவு 8 முத்தம்மாள் காலனி, இரவு 8.45 முத்தையாபுரம், இரவு 9.20 புதுக்கோட்டை.
11 - ம்தேதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து திருப்பரங்குன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் இடங்கள்:-  மாலை 5 மணி நாகமலை புதுக்கோட்டை, மாலை 5.30 வடபழஞ்சி, மாலை 6.30 தனக்கன்குளம், இரவு 7.15  ஹார்விபட்டி, இரவு 8 நிலையூர் கைத்தறி நகர், இரவு 8.45 திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் ( பொதுக்கூட்டம் ).
12 - ம்தேதி ஓட்டபிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்கள்:-
மாலை 5 மணி வசவப்புரம், மாலை 5.45 வல்லநாடு, மாலை 6.30 தெய்வசெயல்புரம், இரவு 7.15 சவலாப்பேரி, இரவு 8 ஒட்டநத்தம், இரவு 8.45  ஒசநூத்து, இரவு 9.15 குறுக்குச் சாலை.
13 - ம்தேதி அரவக்குறிச்சி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் இடங்கள் பட்டியல்:-
மாலை 5 மணி சீத்தப்பட்டி காலனி, மாலை 5.45 அரவக்குறிச்சி, மாலை 6.30 பள்ளப்பட்டி, இரவு 7.15 இனங்கனூர், இரவு 8 குரும்பப்பட்டி, இரவு 8.45 ஆண்டிப்பட்டிகோட்டை, இரவு 9.15 ஈசநத்தம்.
14 - ம்தேதி சூலூர்தொகுதியின்அ.தி.மு.க வேட்பாளர் கந்தசாமியைஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்கள் பட்டியல்:-
மாலை 5 மணி சின்னியம்பாளையம், மாலை 5.45 முத்துக்கவுண்டன்புதூர், மாலை 6.45 வாகராயம்பாளையம், இரவு 7.15 கிட்டாம்பாளையம் நால்ரோடு, இரவு 8 கருமத்தம்பட்டி ( சோமனூர் பவர் அவுஸ் ), இரவு 8.30 சாமளாபுரம், இரவு 9.20 சூலூர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து