முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்

வெள்ளிக்கிழமை, 3 மே 2019      சினிமா
Image Unavailable

சென்னை : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.   

தமிழின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ்  சிவனும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். நயன்தாரா சினிமாவில்  உச்சத்தில் இருப்பதால் இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர். 

ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியானது. சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினருடன் நயன்தாரா தமிழ் புத்தாண்டை கொண்டாடிய படம் வைரல் ஆனது.  

இந்த சந்திப்பில் இருவரது திருமணம் குறித்து பேசப்பட்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தத்துக்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து