இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடர்: சிறந்த வீரராக விர்ஜில் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019      விளையாட்டு
Virgin van tick 2019 05 12

Source: provided

லண்டன் : இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரின் சிறந்த வீரராக லிவர்பூல் அணியைச் சேர்ந்த பின்கள வீரரான விர்ஜில் வான் டிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. உலகில் உள்ள தலைசிறந்த லீக்கில் இதுவும் ஒன்று. கடந்த 2017-18 சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வருடத்திற்கான 2018-19 சீசனில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்படும்.

அதன்படி இந்த சீசனின் சிறந்த வீரராக லிவர்பூல் அணியின் பின்கள வீரரான விர்ஜில் வான் டிஜ்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-13 சீசனில் பின்கள வீரர் ஒருவர் சிறந்த வீரருக்கான விருதை பெற்றார். அதன் பின் தற்போது விர்ஜில் வான் இந்த விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து