எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அறிவித்துள்ளார். மேலும் முகவர்கள் செல்போன் கொண்டுவர அனமதியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மின்னணு பரிமாற்றம்...
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
நடந்து முடிந்த 38லோக்சபா தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றிற்குரிய வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. நாளை காலை 8 மணியளவில் தபால் வாக்குகளும், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணும் பணி துவங்கப்படும். மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகளின் விரைவு மதிப்பீட்டுக் குறியீடு சரிபார்ப்பு (Qr-code) முடிந்தவுடன் அவை அஞ்சல் வாக்குகள் எண்ணும் மேசைக்கு அனுப்பப்படும்.
தபால் வாக்குகள்...
ஒவ்வொரு லோக்சபா தொகுதியும் 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய நிலையில், ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதிக்குரிய வாக்கு எண்ணும் கூடத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளுக்கான எண்ணிக்கை முடிந்த 30 நிமிடங்களுக்குப் பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை துவங்கும். மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கூடங்களில் வாக்கு எண்ணும் பணி காலை 8. மணியளவில் துவங்கும். இடைத் தேர்தல் நடைபெற்ற 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்ற பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை காலை 8.30 மணிக்குப் பிறகு துவங்கும்.
ஒப்புகை சீட்டுகள்...
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலுள்ள வாக்கு எண்ணும் பணி முன்னரே திட்டமிட்டபடி, சுழற்சி முறையில் நடைபெறும். கட்டுப்பாட்டுக் கருவியிலுள்ள மின்கலம் இயங்காத நிலையில், மாற்று மின்கலம் பொருத்தப்பட்டு எண்ணிக்கை பணி தொடரும். கட்டுப்பாட்டுக் கருவியிலிருந்து முடிவுகளைப் பெற முடியாத நிலையில், அக்கருவி, தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, மற்ற மின்னணு வாக்கு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கைப் பணி முடிவுற்ற பின்னர் அக்கட்டுப்பாட்டு கருவியின் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியிலுள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்.
சரிபார்க்கும் பணி...
இந்தியத் தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்களின்படி, தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறைவுக்காக காத்திராமல் மின்னணு வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும். தேர்தல் முடிவு அறிவிப்பின் போது வெற்றி வாக்கு வித்தியாசம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகளை விட குறைவாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகள் தேர்தல் அலுவலரின் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும். வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் பணி பின்வரும் முறையில் நடைபெறும்: மின்னணு வாக்குப் பதிவுக்குரிய கட்டுப்பாட்டுக் கருவியின் மின்கலம் மாற்றப்பட்ட நிலையிலும் முடிவுகளைப் பெறமுடியாத சூழல் ஏற்படும்போது;
மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றதை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் ஆணையிட்டிருந்தால்; கட்டுப்பாட்டுக் கருவியிலுள்ள வாக்கு எண்ணிக்கையும், படிவம் 17-சி யில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கையும் வேறுபடும் நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வாக்குகள் பதிவான வாக்குகளை விட அதிகமாக இருக்கும் நிலையில், பாராளுமன்றத் தேர்தலாயின், கட்டுப்பாட்டுக் கருவி குறிப்பிட்ட ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும்.
குலுக்கல் முறையில்...
மாதிரி வாக்குப் பதிவின் போது பதிவான ஒப்புகைச் சீட்டுகளை வெளியில் எடுக்காமல் இருந்தால், வாக்காளர் வாரியாக சான்றொப்பமிட்ட மாதிரி வாக்குப் பதிவின் அனைத்து ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட்டு, சரிபார்க்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் விதி 56-க்கு உட்பட்டு தேர்தல் அலுவலரால் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை அனுமதிக்கப்பட்டால்; சரிபார்ப்புக்காக தோராயமாக தெரிந்தெடுக்கப்பட்ட 5 வாக்குச் சாவடி மையங்களின் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் ஒப்புகைச்சீட்டு எண்ணுவதற்கான 5 வாக்குச் சாவடிகளைத் தேர்ந்தெடுப்பது குலுக்கல் முறையில் நடைபெறும்.
எழுத்து பூர்வமாக...
வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றின் போது, மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் பணிக்கான இயந்திரங்களைத் தேர்வு செய்வது குலுக்கல் முறையில், தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் விதி 56க்குட்பட்டு நடைபெறும். குலுக்கல் முறையில் தெரிவு செய்வது குறித்து வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எழுத்து பூர்வமாகத் தெரிவிக்கப்படும்.
அஞ்சல் அட்டை அளவிலுள்ள வெள்ளை நிற காகித அட்டைகள் குலுக்கலுக்கான தேர்வுமுறைக்குப் பயன்படுத்தப்படும். சட்டசபை தொகுதியின் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெள்ளை நிற காகித அட்டைகளின் எண்ணிக்கையும் இருக்கும். மேலே பத்தி 7-ல் (அ) முதல் (ஈ) வரையுள்ள காரணங்களுக்கான ஒப்புகைச் சீட்டுகள் எண்ணும் பணிக்குரிய இயந்திரங்கள் குறித்த விவரம் குலுக்கல் முறையில் நடத்தப்படும் அட்டைகளில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.
காகித அட்டைகள்...
சட்டசபை தொகுதி / லோக்சபாதொகுதி எண் மற்றும் பெயர், வாக்கு நடைபெற்ற நாள், வாக்குச்சாவடி மைய எண் ஆகிய விவரங்கள் 1 அங்குல நீளம் அகலத்துடன் கூடிய அச்சிடப்பட்ட காகித அட்டைகள் குலுக்கலுக்குப் பயன்படுத்தப்படும். இந்த காகித அட்டைகள் நான்கு மடிப்புகளாக மடிக்கப்படுவதால் உள்ளே வாக்குச்சாவடி எண் வெளியில் தெரியாது. ஒவ்வொரு காகித அட்டையையும் மடித்து பெட்டிக்குள் செலுத்துவதற்கு முன் வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் காண்பிக்கப்படும் தேர்தல் அலுவலரால் 5 காகித அட்டைகளைத் தெரிவு செய்வதற்கு முன் அதற்கான பெட்டி நன்கு குலுக்கப்படும்.
ஒப்புகைச் சீட்டு...
வாக்கு எண்ணிக்கை மையத்தில், அமைக்கப்பட்ட "வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்ட குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுவதோடு மேலே பத்தி 8-ல் ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணிக்கான (அ) முதல் (ஈ) குறிக்கப்பட்டுள்ள பணிகள் முதலில் நடைபெறும். அதனையொட்டி மற்ற 5 வாக்குச் சாவடிகளுக்கான ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணி நடைபெறும். இவ்வாறுஅந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு
02 Nov 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
-
எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை
02 Nov 2025சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
02 Nov 2025புதுடெல்லி: லண்டன் செல்லும் ரயிலில் (சனிக்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-11-2025.
03 Nov 2025 -
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
-
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
-
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
-
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
-
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
-
தமிழகத்தில் வெப்பநிலை உயரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
-
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்
03 Nov 2025சென்னை, தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு சம்பவம் குறித்து செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தார்.


