உலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      விளையாட்டு
kapil captain 2019 05 21

புதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்பு...

இந்திய அணி இரண்டு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலும் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2003-ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி 2-வது இடத்தை பிடித்தது. 1987, 1996, 2015 ஆகியவற்றில் அரை இறுதியில் தோற்றது. 12-வது உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. இந்திய அணிக்கு 3-வது உலகக்கோப்பை கிடைக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆல்டைம் அணி...

இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய இந்திய அணியை வைத்து சிறந்த அணியை (ஆல்டைம் பெஸ்ட் லெவன்) ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. ஆல்டைம் உலக அணிக்கு கபில்தேவ் கேப்டனாக உள்ளார். டோனி துணை கேப்டனாக இருக்கிறார். 11 பேர் கொண்ட இந்த அணியில் விராட் கோலிக்கு இடமில்லை. அவர் 2 உலகக்கோப்பையில் ஆடியுள்ளார்.

உலகக்கோப்பையில் இந்தியாவின் சிறந்த லெவன் வருமாறு:-

1. தெண்டுல்கர்
சச்சின் இல்லாத ஒரு இந்திய கனவு அணியை கற்பனை செய்ய முடியாது, 6 உலகக்கோப்பையில் (1992- 2011) விளையாடி 2278 ரன் (44 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 56.95 அதிகபட்சமாக 152 ரன் குவித்துள்ளார். 6 சதமும், 15 அரை சதமும் இதில் அடங்கும். உலகக்கோப்பையில் அதிக ரன் எடுத்த சர்வதேச வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். 1996, 2003, 2011 ஆகிய உலகக்கோப்பைகளில் அதிக ரன்கள் குவித்தார்.

2.கங்குலி
2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இவரும் சிறந்த தொடக்க வீரர் ஆவார். இலங்கைக்கு எதிராக 183 ரன் குவித்தது (1999) இன்றும் சாதனையாக இந்திய அணியில் உள்ளது. 3 உலகக்கோப்பை தொடரில் விளையாடி 1006 ரன் (21 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 55.88 ஆகும். 4 சதமும், 3 அரை சதமும் அடித்துள்ளார்.

3. ராகுல் டிராவிட்
3-வது வரிசையில் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை மேற்கொண்டவர். 1999 உலகக்கோப்பையில் ரன்களை குவித்தார். உலகக்கோப்பை தொடரில் 860 ரன் (21 இன்னிங்ஸ்) பெற்றார். இதில் 2 சதமும், 6 அரை சதமும் அடங்கும். சராசரி 61.42 ஆகும்.

4. மொகீந்தர் அமர்நாத்
1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் விருதை பெற்றார். திறமை வாய்ந்த ஆல்-ரவுண்டர். 254 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 21.16 ஆகும். 16 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

5. முகமது அசாருதீன்
3 உலகக்கோப்பைக்கு கேப்டனாக பணியாற்றியவர். இதில் 1996-ல் இந்தியாவில் நடந்த போட்டியில் அணியை அரை இறுதிக்கு கொண்டு சென்றவர். மிடில் ஆர்டர் வரிசையில் அணிக்கு பலம் சேர்த்தவர். 1987-ல் இந்திய அணி அரை இறுதியில் நுழைய காரணமாக திகழ்ந்தார். 8 அரை சதத்துடன் உலகக்கோப்பையில் 826 ரன்கள் எடுத்துள்ளார்.

6. யுவராஜ் சிங்
சுழற்பந்து ஆல்-ரவுண்டர் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. தொடர் நாயகன் விருதை பெற்றார். 2003 மற்றும் 2011 உலககோப்பையில் சில ஆட்டங்களில் அதிரடியான ஆட்டம் மிகவும் பலன் அளித்தது. 3 உலகக்கோப்பையில் விளையாடி 738 ரன் எடுத்து உள்ளார். சராசசி 52.71 ஆகும். 1 சதமும், 6 அரைசதமும் அடித்துள்ளார்.

7.டோனி (துணைகேப்டன்)
இந்திய ஒருநாள் போட்டியின் அனைத்து காலக்கட்டத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர். உலகின் சிறந்த கேப்டனில் ஒருவர். 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் உலககோப்பையை பெற்றுக்கொடுத்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். 2015-ல் அணியை அரைஇறுதி வரை அழைத்து சென்றார். உலககோப்பை தொடரில் 507 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 42.25 ஆகும். 3 அரைசதம் அடங்கும். 27 கேட்ச் பிடித்துள்ளார். 5 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

8. கபில்தேவ் (கேப்டன்)
ஆல்-ரவுண்டர் திறமையில் இந்தியாவுக்கு முதல் முறையாக உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 1983-ல் அப்போதைய ஜாம்பவான் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி உலககோப்பையை வென்று பெருமை சேர்த்தார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 175 ரன்கள் குவித்து சிறந்த அதிரடியை வெளிப்படுத்தினார். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான அவர் இறுதிப்போட்டியில் விவியன் ரிச்சர்ட்சை நீண்ட தூரம் ஓடிச்சென்று பிடித்த கேட்ச் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இன்றும் மறக்க இயலாத ஒன்றாகும். 669 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 37.16 ஆகும். 28 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

9. ஸ்ரீநாத்
இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீரர்களில் ஒருவர் 1992, 1996, 1999 மற்றும் 2003 ஆகிய உலககோப்பையில் ஆடி உள்ளார். 34 ஆட்டத்தில் 44 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 30 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாகும்.

10. கும்ப்ளே
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீரர் கும்ப்ளே. 1996 உலககோப்பையில் இவரது பந்துவீச்சு மிகவும் அதிரடியான இருந்தது. அதிக விக்கெட்டுகளை சாய்த்தார். 31 விக்கெட்டுகளை உலகக்கோப்பையில் கைப்பற்றினார்.

11. ஜாகீர்கான்
இந்திய அணியின் சிறந்த இடதுகை வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் 2003 மற்றும் 2011 உலககோப்பையில் இவரது பங்களிப்பு சிறப்பானது. 23 ஆட்டத்தில் விளையாடி 44 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

12-வது வீரராக தேர்வான விராட் கோலி 2 உலககோப்பையில் விளையாடி 587 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், ஒரு அரைசதமும் அடங்கும்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து