முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை

புதன்கிழமை, 10 டிசம்பர் 2025      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

திருப்பதி, திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு தரிசனம், பக்தர் கூட்ட நெரிசல், பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் சேவை வசதிகள் குறித்து திருமலை அன்னமையா கூடத்தில் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு, திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் - பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு பேசியதாவது:-

வைகுண்ட ஏகாதசி நாளில் அதிகமான பக்தர்கள் கூடும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான ஊழியர்கள், கூட்டநெரிசல் கட்டுப்பாட்டு குழுக்கள், போக்குவரத்து கண்காணிப்பு அணிகள் இணைந்து செயல்பட வேண்டும். லட்டு வழங்கும் மையங்களில் நெரிசலை தவிர்க்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். டோக்கன் தருவதாக பக்தர்களை ஏமாற்றி மோசடி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். டிரோன்கள் மூலம் கூட்டம் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராமகிருஷ்ணா, ராமகிருஷ்ணச்சாரி, ஸ்ரீநிவாசுலு, குலசேகர், ஸ்ரீநிவாசராவ், துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடநாராயணா, பிரசாத், விஜய்ஷேகர், சந்திரசேகர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், விஜிலன்ஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து